சென்னையில் நின்றுக்கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கி வாயில் கத்தியை வைத்து நடந்து வந்தபடி வீடியோ பதிவு செய்த 4 பள்ளி மாணவர்கள்.!

0 3159

சென்னையில் நின்றுக்கொண்டிருந்த ரயிலில் இருந்து இறங்கி வாயில் கத்தியை வைத்து நடந்து வந்தபடி வீடியோ பதிவு செய்து  இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட 4 பள்ளி மாணவர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கீழ்பாக்கம் சாஸ்திரி நகர் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இருந்து மாணவன் இறங்குவதை போலவும், இறங்கியதும் மற்ற 3 மாணவர்களில் ஒருவன் ஒரு கத்தியை அவனிடம் கொடுப்பது போலவும், அதை வாயில் வைத்தப்படி நடப்பது போலவும் வீடியோ பதிவு செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோ  வேகமாக பரவிய நிலையில், சம்மந்தப்பட்ட 4 மாணவர்களையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments