தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

0 2143
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

21-ந் தேதியும் தென் தமிழகத்தில் மழை நீடிக்கும் எனக் கூறியுள்ள வானிலை மையம், 24-ந் தேதிவரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிதமானது வரையில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் மட்டும் காணப்படும் எனவும், மழைக்கு வாய்ப்பில்லை எனவும் கூறியுள்ள வானிலை மையம், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments