தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி பயணம்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாடு ஆளுநரின் தேநீர் விருந்தை ஆளும் கட்சி புறக்கணித்தது, மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிரான போராட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளுக்கு மத்தியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டு சென்றார்.
சென்னையில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் மூலம் அவர் டெல்லி சென்றார். டெல்லியில் அவர் குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்திப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
நீட் மசோதா தொடர்பான அறிக்கையை ஆளுநர் தயாரித்துள்ளதாகவும், அதை மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் சில நாட்களுக்கு முன் தகவல் வெளியான நிலையில் அவரது இந்த பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
Comments