நார் தொழிற்சாலையில் பயங்கர தீவிபத்து.. ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து நாசம்!

0 1298

கிருஷ்ணகிரியை அடுத்த காவேரிப்பட்டிணத்தில் இயங்கி வரும் நார் தொழிற்சாலையில், ஏற்பட்ட தீவிபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாயின.

பண்ணிஹல்லி பகுதியில், மாதையன் என்பவருக்கு சொந்தமாக நார் தயாரிக்கும் தொழிற்சாலையில் நள்ளிரவு நேரத்தில் ஊழியர்கள் வெளியே வந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தபோது திடீரென தீப்பற்றியதாக கூறப்படுகிறது. அதில் தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவி, கொளுந்துவிட்டு எரிந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை அணைத்தனர். இருப்பினும் தொழிற்சாலையில் இருந்த 20 லட்சம் ருபாய் மதிப்பிலான இயந்திரங்கள், நார் மற்றும் கயிறுகள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments