பெரம்பலூரில் பள்ளி மாணவியை கிண்டல் செய்த நபரை தட்டிக்கேட்க சென்ற பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்ற இளைஞர் கைது.!

0 1788

பெரம்பலூர் மாவட்டத்தில், பள்ளி மாணவியை கிண்டல் செய்த நபரை தட்டிக்கேட்க சென்ற பெற்றோர் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீச முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வரும் மாணவியை மேற்கு மலையடிவாரத்தில் வசிக்கும் தனபால் என்பவன் ஒரு தலையாக காதலித்து வருவதோடு, அந்தப் பெண்ணை பின் தொடர்ந்து வந்து கிண்டல் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர் ஒருவருடன் சென்று தனபாலை கண்டித்த போது, ஆத்திரமடைந்த அவன், வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது வீச முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றிய போலீசார்,தனபாலை கைது செய்தனர். மேலும் தனபால் சட்ட விரோதமாக வீட்டில் பதுக்கி வைத்திருந்த 23 க்கும் மேற்பட்ட நாட்டு வெடிகுண்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments