இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி தனுஷ்கோடி வந்த 3 பேரிடம் போலீஸ் விசாரணை!

இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி தனுஷ்கோடி வந்த 3 பேரிடம் போலீஸ் விசாரணை!
இலங்கையில் இருந்து வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்த இரு சிறுவர்கள், பெண் என ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை தனுஷ்கோடி அருகே மெரைன் போலீசார் மீட்டனர்.
இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் வாழ்வாதாரம் தேடி தமிழகம் நோக்கி ஈழ தமிழ் மக்கள் வருகின்றனர். மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண், சிறுமி மற்றும் சிறுவன் என மூன்று பேர் தனுஷ்கோடி வந்தனர்.
தனுஷ்கோடி வந்த 3 பேரிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாழ்வாதாரம் தேடி இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.
Comments