ஆளுநர் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரி தமிழக டிஜிபிக்கு கடிதம்!

0 2040

தமிழக ஆளுநரின் வாகனத்தை நோக்கி கொடிகளை வீசியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிபி சைலேந்திரபாபுக்கு ஆளுநரின் பாதுகாப்பு அதிகாரி விஸ்வேஸ் பி.சேஷாத்ரி கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், ஆளுநரின் வாகனத்தின் முன் இருக்கையில் தாம் அமர்ந்து இருந்ததாகவும், மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி அருகே சென்றபோது, சாலையோரத்தில் கூடியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், காவல்துறை ஏற்படுத்திய தடுப்பை உடைத்துக் கொண்டு ஆளுநரின் வாகனத்தை நோக்கி வர முயன்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கொடி மற்றும் கொடியுடன் கூடிய கம்புகளை ஆளுநரின் வாகனத்தை நோக்கி வீசினர் என்றும் அதற்குள் ஆளுநரின் வாகனம் அப்பகுதியைக் கடந்து சென்றதால் ஆளுநருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.இந்திய தண்டனைச் சட்டம் 124-இன் படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில்  கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments