இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.. ஆண்நண்பரின் மனைவி, மகள் குறித்து முகநூலில் ஆபாசப்பதிவு

0 5302
இளம்பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு.. ஆண்நண்பரின் மனைவி, மகள் குறித்து முகநூலில் ஆபாசப்பதிவு

கோவையில் தனது ஆண் நண்பரின் மனைவி மற்றும் மகள் குறித்து சமூகவலைதளத்தில் ஆபாசமாக பதிவிட்ட இளம்பெண் மீது போக்சோ சட்டம் த்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த உமா ரஞ்சனி என்ற பெண்ணுக்கும் கோவையைச் சேர்ந்த ரமேஷ் என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக தவறான உறவு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இரு குடும்பத்தார் பேச்சுவார்த்தைக்கு பின் உமா ரஞ்சனியும், ரமேஷூம் பிரிந்துள்ளனர்.

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் உமா ரஞ்சினி, ரமேஷின் மனைவி மற்றும் 15 வயது மகள் குறித்து ஆபாசமாகவும் அவதூறாகவும் முகநூலில் பதிவிட்டதாக கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments