செல்போனை பறித்த தகராறில் ரவுடி வெட்டிக் கொலை.. 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கைது

0 1750
செல்போனை பறித்த தகராறில் ரவுடி வெட்டிக் கொலை.. 7 பேர் கொண்ட மர்ம கும்பல் கைது

சென்னை தண்டையார்பேட்டையில் செல்போனை பறித்த தகராறில் ரவுடியை வெட்டி கொன்ற 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

தண்டையார்பேட்டை, தண்டையார் நகரை சேர்ந்த ஜீவன் குமார் என்ற ஜீவா மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழிப்பறி, திருட்டு, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

கடந்த 17ஆம் தேதி இரவு புதுவண்ணாரப்பேட்டை  - திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று விட்டு தியாகி பெருமாள் சாலை சந்திப்பில் ஜீவா நடந்து சென்ற போது அவ்வழியே வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல் சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி சென்றது. இதில் ஜீவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு 7பேரை கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து நான்கு கத்திகள் மற்றும் 2 இருசக்கர வாகனம் பறிமுதல்செய்யப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments