டயர் வெடித்ததால் கிழிந்த டயருடன் 15 கிலோ மீட்டர் தூரம் சென்ற அரசு பேருந்து..!

0 4133

திருப்பத்தூர் அருகே அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததை அடுத்து, கிழிந்த நிலையில் இருந்த டயருடன் அந்த பேருந்து 15 கிலோ மீட்டர் தூரம் சென்ற சம்பவம் நடைபெற்றுள்ளது.

சேலம் கோட்டம் தருமபுரி மண்டலத்திற்கு உட்பட்ட பணிமனை கட்டுப்பாட்டில் இயங்கும் அந்த நகரப் பேருந்து திருப்பத்தூரில் இருந்து நாட்றம்பள்ளி தொட்டி கிணறு வரை தினமும் இயக்கப்படுகிறது.

imageவழக்கம்போல் தொட்டி கிணறு வரை சென்று மீண்டும் திருப்பத்தூருக்கு அந்த பேருந்து திரும்பும்போது புதுப்பேட்டை பகுதியில் பின்புற டயர் திடீரென வெடித்துள்ளது.

இந்நிலையில், தங்களுடைய பணிமனை கிளை மேலாளர் ஆசை லிங்கத்தை தொடர்புகொண்டு சம்பவத்தை ஓட்டுநர் தெரிவித்த நிலையில், அவர் அப்படியே பணிமனைக்கு வாகனத்தை ஓட்டி வர கூறியதாக சொல்லப்படுகிறது.

image

இதனை அடுத்து, பயணிகள் இறக்கிவிடப்பட்டு, கிழிந்த டயருடனே அந்த பேருந்து பணிமனைக்கு சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments