கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்ததாக முதியவர் மீது ஆசிட் வீசிய இளைஞர் கைது..!

0 1763

கோவையில் டிவி சத்தம் அதிகமாக வைத்த முதியவர் மீது பாத்ரூம் கழுவும் அமிலம் வீசிய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சொக்கம்புதூர் பகுதியை சேர்ந்த சம்பத் என்ற 70வயது முதியவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் டிவியில் சத்தத்தை அதிகமாக வைத்து பார்த்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அருகில் வசிக்கும் வீரமணி என்பவர் முதியவரின் வீட்டிற்குள் புகுந்து டிவியின் சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.

இது குறித்து இருவருக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் ஆத்திரம் அடைந்த வீரமணி பாத்ரூம் கழுவும் அமிலத்தை எடுத்து முதியவர் முகத்தின் மீது வீசியுள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில் வீரமணியை போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments