திருப்பூரில் 4 ஆயிரம் ரூபாய் திருடியதற்காக பார் ஊழியர் அடித்து கொலை..!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே 4ஆயிரம் ரூபாய்க்காக பார் ஊழியர் அடித்து கொலை செய்யப்பட்டார்.
பல்லடத்தை அடுத்துள்ள மகாலட்சுமி நகரில் வசித்து வரும் முருகன் என்பவர் உணவகம் மற்றும் டாஸ்மாக் பார் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி பாரில் இருந்த 4ஆயிரம் ரூபாய் காணாமல் போனது தொடர்பாக விசாரிக்கையில் அங்கு வேலை செய்யும் முத்து என்பவர் திருடியது தெரிய வந்தது.
மேலும் உரிமையாளர் முருகனையும் தகாத வார்த்தையால் முத்து திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் தன்னிடம் வேலை செய்யும் ஊழியர்களின் உதவியுடன் முத்துவை அடித்து உதைத்ததில் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் முருகன் உள்பட 7பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Comments