மே முதல் வாரம் 3 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

0 2104
மே முதல் வாரம் 3 ஐரோப்பிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம்

ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் பிரதமர் மோடி மே முதல்வாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெறும் இரண்டாவது இந்தியா -நார்டிக் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.

நார்டிக் அமைப்பின் உறுப்பு நாடுகளான நார்வே, ஐஸ்லாண்ட், டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து, ஆகிய 5 நாடுகளின் தலைவர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். மாசு ஏற்படுத்தாத தொழில்நுட்பம் , பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளன.

தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்குச் செல்லும் மோடி, பாதுகாப்பு, இருதரப்பு உறவுகள், உக்ரைன் விவகாரம் ஆகியவை குறித்து அந்நாட்டுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments