ஆப்கானிஸ்தானின் காபுலில் பள்ளிக்கூடத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்கள் - 6 பேர் பலி

0 2232

ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள பள்ளிக்கூடம் மீது நிகழ்த்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 6 பேர் உயிரிழந்தனர்.

பள்ளிக்குழந்தைகள் பலர் காயமடைந்துள்ளனர். உயர்நிலைப்பள்ளியின் மீது 3 குண்டுகள் வீசப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷியா பிரிவு முஸ்லீம் மக்கள் வசித்து வரும் பகுதியில் அப்பள்ளி அமைந்துள்ளது.

எனவே, ஷியா பிரிவு முஸ்லீம்களை குறிவைத்து இந்த தாக்குதலை சன்னி பிரிவு கிளர்ச்சியாளர்களோ அல்லது ஐஎஸ் பயங்கரவாதிகளோ நடத்தியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் தாக்குதலுக்கு இதுவரையிலும் எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments