குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருடி விற்பனை செய்த காவலர் உட்பட 3 பேர்..

0 2246
சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருடி விற்பனை செய்ததாக முதல் நிலை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை மயிலாப்பூர் காவல் நிலையத்தில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை திருடி விற்பனை செய்ததாக முதல் நிலை காவலர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தொடர்ச்சியாக காணாமல் போனதை அடுத்து, அங்கிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது, காவல்நிலையத்திற்கு பின்புறம் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் காவலர் ஜெயசந்திரன், வாகனங்களை திருடியது தெரிய வந்தது.

ஜெயச்சந்திரன் வாகனங்களை திருடி அதே அதே பகுதியைச் சேர்ந்த நாகராஜ், அருள்ராஜ் ஆகிய இருவரிடம் கொடுத்ததும், அவர்கள் இரும்புக் கடையில் வாகனங்களை விற்று பணம் பெற்று, மூவரும் சேர்ந்து மது அருந்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து மூவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காவலர் ஜெயச்சந்திரனின் மனைவி கடந்த மாதம் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டார்.

இவருக்கு 6 வயதில் மகனும் 10 வயதில் மகளும் இருக்கும் நிலையில் மது அருந்த பணம் தேவைப்பட்டதால் காவல்நிலையத்தில் இருந்த வாகனங்களை திருடி விற்பனை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments