முதியவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாய் பணம் பறித்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேர்...

0 1809
சென்னை அடுத்த கொடுங்கையூரில் முதியவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை கொடுங்கையூர் காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.

சென்னை அடுத்த கொடுங்கையூரில் முதியவரிடம் இருந்து ஒரு லட்சம் ரூபாயை பறித்து சென்ற 2 சிறுவர்கள் உள்ளிட்ட 3 பேரை கொடுங்கையூர் காவல்துறையினர் 12 மணி நேரத்தில் கைது செய்தனர்.

கொடுங்கையூர் குமரன் நகரை சேர்ந்த திருவழகு, வங்கியில் அடமானம் வைத்த நகைகளை மீட்பதற்காக ஒரு லட்சம் ரூபாய் பணத்தை அவரது மகளுடன் எடுத்த சென்ற நிலையில் வங்கிக்கு வெளியே நின்று இருவரும் பணத்தை எண்ணிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் வங்கியில் உணவு இடைவெளி காரணமாக சிறிது நேரம் கழித்து வர சொன்னதால் திருவழகு வீட்டிற்கு புறப்பட்டார். இதனை நோட்டமிட்டு அறிந்த 3 பேர் அவரது கைப்பையை பறித்துவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச் சென்றனர்.

புகாரின் பேரில் சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், ஆர்15 பைக்கில் வந்த 3 பேர் முதியவரிடம் பணம் பறித்து சென்றது உறுதியானது, அதன் அடிப்படையில் 3 பேரையும் கைது செய்த போலீசார் பணத்தை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments