தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகள்..!

0 2027
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை காணலாம்...

தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்யமான நிகழ்வுகளை காணலாம்...

சட்டப்பேரவையில் உதகமண்டலம் எம்.எல்.ஏ. கணேஷ், தனது தொகுதி தொடர்பான கோரிக்கைகளை தொடர்ந்து முன்வைத்த நிலையில், ஒரே கேள்வியை இவ்வளவு நேரம் கேட்டு ஒரு விவாதத்தையே நடத்தி முடித்ததாக, சபாநாயகர் அப்பாவு நகைச்சுவையாக கூறியது அவையில் சிரிப்பலையை ஏற்படுத்தியது.

 

மன்னார்குடி புறவழிச்சாலை அமைப்பது தொடர்பான முதற்கட்ட பணியை தொடங்க வேண்டும் என்ற எம்.எல்.ஏ டி.ஆர்.பி. ராஜாவின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அமைச்சர் எ.வ.வேலு உடனடியாக உறுதியளித்தார். முன்னதாக தான் பேசத் தொடங்கும் முன் 'கேட்குதா, கேட்குதா' என தனது மைக்கை சிறிது நேரம் சரிசெய்தார்.

 

பண்ருட்டி தொகுதியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்கக்கோரி கடந்த ஆண்டு விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றும் இந்த ஆண்டாவது கல்லூரி அமைக்கப்படுமா? என எம்.எல்.ஏ. வேல்முருகன் கேட்ட போது அவையில் சிரிப்பலை எழுந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments