ரஷ்யாவிடம் இருந்து முடிந்த அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்.!

0 3815

உக்ரைன் ரஷ்யா இடையே போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவிடம் இருந்து முடிந்த அளவுக்கு அதிகமான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் ஆரம்பித்த காலம் முதல் இதுவரை ரஷ்யாவிடம் இருந்து 15 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்கள் டாலர் அடிப்படையில் கட்டணமாக செலுத்தி இறக்குமதி செய்துள்ளன.

இந்நிலையில், வழக்கமான டெண்டர் முறையில் இல்லாமல், பேச்சுவார்த்தை மூலம் அதிக சலுகையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க இந்திய எண்ணெய் நிறுவனங்கள் முனைப்புடன் உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே S&P Global Platts எனும் சந்தை ஆய்வு நிறுவனம் ரஷ்ய கச்சா எண்ணைக்கு பேரலுக்கு 33 டாலர் என்ற சலுகை விலையை நிர்ணயித்துள்ளது. 

போர் அச்சுறுத்தல் காரணமாக சரக்கு கப்பல்களின் போக்குவரத்து மற்றும் காப்பீடு கட்டணங்கள் அதிகரித்துள்ள நிலையில், முடிந்த அளவுக்கு அதிக சலுகை பெற இந்திய நிறுவனங்கள் முயற்சித்து வருகின்றன.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments