சென்னை அருகே மேலும் ஒரு பன்னாட்டு விமான நிலையம்..!
சென்னை அருகே மேலும் ஒரு பன்னாட்டு விமான நிலையம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் அடங்கிய அறிக்கையை இந்திய விமான நிலைய ஆணையம் சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தொழில் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், டிட்கோ நிறுவனமும் இந்திய விமான நிலைய ஆணையமும் இணைந்து தற்போதுள்ள விமான வசதிகளை விரிவுப்படுத்த தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனொரு பகுதியாக, சென்னை அருகே மேலும் ஒரு புதிய பன்னாட்டு விமான நிலையத்தை நிறுவ திட்டமிட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பன்னாட்டு விமான நிலையத்தை அமைக்க சாத்தியம் உள்ள இடங்களை அடையாளம் காண்பதற்கான பணியை டிட்கோ நிறுவனம் மேற்கொண்டு வரும் நிலையில், சாத்தியமுள்ள நான்கு இடங்களை தேர்வு செய்து, சாதக, பாதகங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
மேலும், தமிழகத்தின் வடமேற்கு பகுதியில் உள்ள தொழில் வளர்ச்சி மற்றும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு ஒசூரில் விமான நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Comments