ஸ்ரீநகரில் சாலை விபத்தில் சிக்கி தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் உயிரிழப்பு.!

0 3702

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் மணி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் அத்திமாஞ்சேரிபேட்டையை சேர்ந்த மணி, ஸ்ரீநகரில் சிஆர்பிஎஃப் வீரராக பணியாற்றி வந்தார். நேற்றிரவு பணி முடித்துவிட்டு சக வீரர்கள் 11 பேருடன் ராணுவ வாகனத்தில் பயணித்துள்ளார்.

ஹைடர்போரா சாலையில் சென்றுகொண்டிருந்த போது, அவர்களது வாகனம் எதிர்பாராதவிதமாக எதிரே வந்த லாரி மீது மோதி நிலை தடுமாறி சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்க்கிற்குள் நுழைந்து விபத்துக்குள்ளானது.

இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற வீரர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மணியின் உடலை தமிழகம் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும், விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் சிஆர்பிஎஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments