சர்ப்பிரைஸ் தருகிறேன் வா... கண்ணை கட்டி கழுத்தை அறுத்த பெண்.. புஷ்பா Fire ஆன பின்னணி.!

0 4132

பெற்றோர் நிச்சயித்த இளைஞரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லாத இளம்பெண், சர்ப்பிரைஸ் தருவதாக அவரை மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்த சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் அனகப்பள்ளியைச் சேர்ந்த PHD ஆராய்ச்சி மாணவி புஷ்பாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணா என்பவருக்கும் வருகிற மே மாதம் 20-ந் தேதி திருமணம் நடத்த பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டிருந்தது.

இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை என புஷ்பா அவரது பெற்றோரிடம் தெரிவித்ததாகவும், இருப்பினும் வலுக்கட்டாயமாக திருமண ஏற்பாடுகள் செய்தாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், ராமகிருஷ்ணா ஹைதராபாத்தில் வேலை செய்து கொண்டிருந்த நிலையில், திருமண வேலைக்காக சொந்த ஊருக்கு வந்திருக்கிறார். அப்போது, திருமணத்தை முன்னிட்டு நண்பர்களுக்கு பேச்சுலர் பார்ட்டி வைக்கலாம் எனக் கூறிய புஷ்பா, மலைப்பகுதியில் சென்று கொண்டாடலாம் என ராமகிருஷ்ணனிடம் ஆசை வார்த்தை கூறியிருக்கிறார்.

திட்டமிட்டபடி, இருவரது நண்பர்களும் வந்திருந்த நிலையில், பேச்சுலர் பார்ட்டியை சந்தோஷமாக கொண்டாடியிருக்கின்றனர். பின்னர், பார்ட்டி முடிந்து நண்பர்கள் அனைவரும் சென்றுவிட்ட நிலையில், புஷ்பாவும், ராமகிருஷ்ணனும் சிறிது நேரம் தனிமையில் நேரத்தை செலவிட்டுள்ளனர்.

அத்தோடு, அங்கு மலைப்பகுதியில் இருந்த கோவிலுக்கும் சென்றிருக்கின்றனர். கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு வந்து கொண்டிருந்த போது, சர்ப்பிரைஸாக பரிசு தருவதாக கூறிய புஷ்பா, தனது துப்பட்டாவை வைத்து ராமகிருஷ்ணனின் கண்ணை கட்டியிருக்கிறார்.

இதனையடுத்து, கைப்பையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமகிருஷ்ணனை கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது. மணக்கோலத்தில் இருக்க வேண்டிய ராமகிருஷ்ணன், ரத்த வெள்ளத்தில் அலறி துடிதுடித்ததை பார்த்து, சற்று மனமிறங்கிய புஷ்பா, தனது ஸ்கூட்டியிலேயே ராமாகிருஷ்ணனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அங்கு ராமகிருஷ்ணனுக்கு என்ன ஆனது என மருத்துவர்கள் கேட்ட போது, மலையிலுள்ள கோவிலுக்குச் சென்றுவிட்டு திரும்பும் போது கால் தவறி அவர் விழுந்ததில் கழுத்தில் காயம் ஏற்பட்டதாக கட்டுக்கதை கட்டி நாடகமாடியிருக்கிறார் புஷ்பா.

ஆனால், கழுத்தில் காயத்தை பார்த்து சந்தேகமடைந்த மருத்துவர்கள் காவல்துறையில் புகாரளித்தனர். பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் தான், பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லாததால், புஷ்பா இந்த வெறிச்செயலை அரங்கேற்றியது தெரியவந்தது.

இதனையடுத்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து புஷ்பாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments