சென்னை : சொகுசு கார் மீது உயர்நீதிமன்ற நீதிபதி மாலா சென்ற கார் மோதி விபத்து.!

0 1882

சென்னை பட்டினப்பாக்கத்தில் சொகுசு கார் மீது சென்னை உயர்நீதிமன்ற பெண் நீதிபதி மாலா சென்ற கார் மோதியதில் நீதிபதி காயமடைந்தார். இன்று காலை பசுமைச்வழி சாலை நீதிபதிகள் குடியிருப்பில் இருந்து நொச்சிக்குப்பம் லூப் சாலை வழியாக தனது காரில் நீதிபதி உயர்நீதிமன்றம் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராவிதமாக பட்டனம்பாக்கம் பகுதியில் முன்னால் சென்ற கார் மீது நீதிபதி சென்ற கார் மோதியது. இந்த விபத்தில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த நீதிபதி மாலாவிற்கும், கார் ஓட்டுநருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

மெரினா கடற்கரை சாலையை நோக்கி செல்லும் லூப் சாலையில் சென்ற பென்ஸ் ரக கார் ஒன்று, வேகத்தடையை கவனிக்காமல் திடீரென பிரேக் போட்டதாக கூறப்படுகிறது.

அப்போது பின்னால் வந்த நீதிபதியின் வாகனம் அவரது வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. லூப் சாலையின் இரு பகுதியிலும் சிறு சிறு கடைகள் உள்ளதோடு, வேகத்தடை மீது எந்தவித அடையாளமும் இல்லாமல் உள்ளதால் இதுபோல் விபத்து நடப்பதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments