யாராலும் திருட முடியாத சொத்து கல்வி தான் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் செயல்படும் பள்ளி மேலாண்மைக் குழுவை மறுகட்டமைப்பு செய்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், யாராலும் திருட முடியாத சொத்து கல்வி தான் என தெரிவித்துள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை துவக்கி வைத்த அவர், பள்ளி பருவத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.
அரசுப் பள்ளிகள் தன்னிறைவு பெறுவதோடு, அனைவருக்கும் தரமான, சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதற்காக தான் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார்.
Comments