சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளியின் முதல்வர் உட்பட மூவர் பணி நீக்கம்

0 2453

சென்னையில் பள்ளி வாகனம் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், தனியார் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

அண்மையில், ஆழ்வார் திருநகரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வளாகத்தில் பள்ளி பேருந்து மோதியதில், இரண்டாம் வகுப்பு மாணவன் தீக்க்ஷித் உயிரிழந்தான்.  இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள், பள்ளி நிர்வாகத்தின் மெத்தனம் காரணமாக விபத்து நடந்ததாக உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை பரிந்துரையின் பேரில் பள்ளி முதல்வர் தனலட்சுமி மற்றும் போக்குவரத்து குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் 2 பேர் என மொத்தம் 3 பேரை பணிநீக்கம் செய்து தனியார் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments