கூவாகத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் அழகிப் போட்டி.. சென்னையை சேர்ந்த திருநங்கை மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு

0 2515
கூவாகத்தில் திருநங்கைகளுக்கான மிஸ் அழகிப் போட்டி.. சென்னையை சேர்ந்த திருநங்கை மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு

விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப்போட்டியில் மிஸ் கூவாகமாக சென்னை மெகந்தி தேர்வு செய்யப்பட்டார்.

கூவாகம் கிராமத்தில் அமைந்துள்ள கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் வந்துள்ளனர்.

இந்த நிலையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற மிஸ் கூவாகம் போட்டியில் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50 திருநங்கைகள் கலந்து கொண்டு விதவிதமான, வண்ண, வண்ண உடைகளில் மேடையில் தோன்றி ஒய்யாரமாக நடந்து வந்தனர்.

3 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை மெகந்தி மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். திருச்சி ரியான சூரி 2-ம் இடத்தையும், சேலம் ஸ்வீட்டி 3-ம் இடத்தையும் பிடித்தனர். இவர்களுக்கு கிரீடம் சூட்டப்பட்டு பரிசுப் பணமும் வழங்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments