தன்னைத் தாக்கியவரை கைது செய்யக் கோரி இளைஞர் செய்த வினோத காரியம்.. தன் கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்ட இளைஞர்

0 2733
தன்னைத் தாக்கியவரை கைது செய்யக் கோரி இளைஞர் செய்த வினோத காரியம்.. தன் கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்ட இளைஞர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் தன்னை தாக்கியவரை கைது செய்யக்கோரி இளைஞர் ஒருவர் தன்கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்டார்.

ஜெயங்கொண்டான் கிராமத்தை சேர்ந்த நடராஜ் மற்றும் தேவதானம்பேட்டையைச் சேர்ந்த விஜி ஆகியோர் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் தண்ணீர் கேன், பலாப்பழம் வியாபாரம் செய்து வருகின்றனர்.

இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை 3 மணி அளவில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் தரப்பினரிடையே விஜி நடராஜனை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த நடராஜ் விஜியை கைது செய்யக்கோரி செஞ்சி காவல்நிலையம் மற்றும் செஞ்சி நான்குமுனை சந்திப்பில் தன் கழுத்தை தானே பிளேடால் அறுத்துக் கொண்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments