கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள்.. பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம்

கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள்.. பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம்
நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோவில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள் அங்கிருந்த பூஜைப் பொருட்களை சேதப்படுத்தின.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் தலைகுந்தா பகவான் கோவில் கதவை உடைத்து புகுந்த 2 கரடிகள் அங்கிருந்த,நெய். எண்ணெய்.தேன்.வாழைப்பழம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்துள்ளது.
இதனை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கரடிகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென வனத்துறையினருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments