தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

0 2066

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக,  தமிழகத்தில் இன்று கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென் தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகள் என பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இன்று முதல் நான்கு நாட்களுக்கு தென் தமிழகம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு, நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம், தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments