பீஸ்ட் பார்த்த ரஜினி.. நெல்சனுக்கு ரெஸ்ட்.! கூட்டணி உடைகின்றது..! ஐஸ் கிரீம் கூட நல்லா இருந்ததாம்.!

0 5875
பீஸ்ட் பார்த்த ரஜினி.. நெல்சனுக்கு ரெஸ்ட்.! கூட்டணி உடைகின்றது..! ஐஸ் கிரீம் கூட நல்லா இருந்ததாம்.!

நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் நெல்சனுக்கு பதில் வேறு ஒரு இயக்குனருக்கு கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

படுத்துக் கொண்டே ஜெயிப்பேன் என்பது போல கடந்த காலங்களில், தனது படத்திற்கு செல்ப் புரமோசன் செய்து வந்தவர் பீஸ்ட் இயக்குனர் நெல்சன்..!

டாக்டர் பட வெற்றிக்கு பின்னர் தோசைக்காக காத்திருந்தவரை பிடித்து டேஸ்ட்டாக பீஸ்ட் எடுக்க சொன்னது குத்தமா ? என்று பணம் போட்டவர்களை கேட்க வைத்து விட்டார் நெல்சன். மகனை பிரிந்து வாழும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூட பீஸ்ட் படத்தில் நெல்சனை காணவில்லை என்று கலாய்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்

விஜய்யுடன் வாய்ப்பு கிடைக்குமா என பலர் காத்திருக்க, நெல்சனை அழைத்து கண்ணா லட்டு தின்ன ஆசையா ? என்று பீஸ்ட் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் அந்த படம் திரையரங்கிற்கு வந்து என்ன விதமான சாதக பாதகங்களை உருவாக்கப்போகின்றது என்பது தெரியாமலே, கண்ணா ரெண்டு திங்க ஆசையா ? என்று ரஜினியின் புதிய படத்தை இயக்கும் வாய்ப்பும் நெல்சன்- அனிருத் கூட்டணிக்கு கிடைத்தது.

பீஸ்ட் வெளியாகி திரை ரசிகர்களால் ரோஸ்ட் செய்யப்பட்ட நிலையில், நெல்சனின் இயக்கத்தில் புதிய படம் நடிக்க தயாராக இருந்த ரஜினிகாந்த், தயாரிப்பு நிறுவனத்தின் சிறப்பு ஏற்பாட்டில் பீஸ்ட் படத்தை பார்த்தார். இடைவேளையில் உற்சாகமாக ஐஸ்கிரீம் உள்ளிட்ட உணவு பொருட்களை வரவழைத்து சாப்பிட்டு உற்சாகமாக இருந்ததாக கூறப்படுகின்றது. பின்னர் படம் முடிந்து அரை மணி நேரம் கடந்த பின்னரும் தியேட்டரை விட்டு வெளியே வராமல் அமைதியாக இருந்த ரஜினியிடம் அவரது உறவினர் ஒருவர் சென்று பேச்சுக் கொடுத்து வெளியே அழைத்து வந்துள்ளார்.

அப்போது அந்த உறவினர் , ரஜினியிடம் பீஸ்ட் எப்படி ? என்று கேட்ட போது ஐஸ்க்ரீம் சூப்பராக இருந்ததாக ரஜினி கூறிச்சென்றதாக கூறப்படுகின்றது. ரஜினியின் மன நிலையை உணர்ந்த தயாரிப்பு நிறுவனமோ, புதிய படத்தின் இயக்குனராக நெல்சனை நீட்டிப்பதா? வேண்டாமா ? என்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரத்தை ரஜினியிடம் ஒப்படைத்து விட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே அண்ணாத்தேக்கு எழுந்த கலவையான விமர்சனங்களை தொடர்ந்து கதை மற்றும் இயக்குனர் தேர்வில் கவனமாக இருக்கும் ரஜினி, நெல்சனுக்கு பதில் வேறு இயக்குனரை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாக உள்ளது.

அட்லி மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி ஆகிய இருவரில் ஒருவருக்கு ரஜினி தனது படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கலாம் என்றும் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் அடுத்த வாரம் அறிவிக்கப்பட்ட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments