நெல்லையில் இளைய மகளுக்கு விஷத்தை கொடுத்து விட்டு அதனை தானும் குடித்து தாயும் தற்கொலை.!

0 3671

நெல்லையில் 10 வயதான மூத்த மகள் விஷத்தை தட்டிவிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்து வருவதற்குள் இளைய மகளுக்கு அதனை கொடுத்த தாய், தானும் குடித்து உயிரிழந்தார்.

நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி என்பவரின் மனைவி சுமதி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ள நிலையில், குடும்பத் தகராறு காரணமாக நேற்று முன்தினம் தனது இளைய மகளுக்கு விஷத்தை கொடுத்த சுமதி, தானும் அதனை குடித்துள்ளார்.

விஷம் கொடுத்த சமயத்தில் மூத்த மகள் அதனை தட்டிவிட்டு அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்தார். இதனை அடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை இருவரும் உயிரிழந்தனர்.

6 மாதங்களுக்கு முன் நெல்லைக்கு பணி மாறுதலாகி வந்த சுமதி, தனது தாய் வீட்டில் இருந்து வேலைக்கு சென்றுள்ளார். இந்நிலையில், மாடசாமி தனது சொந்த ஊருக்கு அழைத்த நிலையில், சுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.

மேலும், இறந்த தனது அண்ணனின் குடும்பத்திற்கு மாடசாமி பணம் கொடுப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் சுமதியை அடித்ததாகவும் கூறப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments