மது போதைக்கு அடிமையான சகோதரர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன் கைது

0 3140
மது போதைக்கு அடிமையான சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணன் கைது

கன்னியாகுமரியில் மது போதைக்கு அடிமையான சகோதர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் கூட பிறந்த தம்பியை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

நித்திரவிளை அருகே விரிவிளை பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த டென்னீஸ் மற்றும் அவனது தம்பி பிரைட் ஆகியோர் மதுக்கு அடிமையானதால் மனைவி குழந்தைகளை பிரிந்து ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 16-ஆம் தேதி எப்போதும் போல இருவருக்கும் போதையில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் இளைய சகோதரன் பிரைட்., வீட்டில் உள்ள பாத்திர பண்டங்களை உடைத்து ரகளையில் ஈடுபட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த டென்னீஸ் தனது சகோதரன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதாக கூறப்படுகிறது. இதில் பிரைடின் அடி வயிறு பகுதி மிக மோசமாக எரிந்துள்ளது. இருப்பினும் போதை தலைக்கேறிய நிலையில், அந்த தீக்காயங்களுடன் பிரைட் அங்கேயே படுத்துக்கிடந்துள்ளார்.

சகோதரர்கள் எப்பவும் போல போதையில் கூச்சல் இடுவதாக நினைத்து அக்கம்பக்கத்தினரும் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், 40 சதவீத தீக்காயங்கள் ஏற்பட்ட பிரைட் காப்பாற்றுவார் யாருமின்றி, உயிரிழந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments