டெல்லி அணி வீரருக்கு கொரோனா தொற்று உறுதி.!

டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கும் நிலையில் சென்னை மற்றும் மும்பை அணி ரசிகர்கள் கேன்சல் ஐபிஎல் என டேக் செய்து மீம்ஸ்களை பதிவிட்டு வருவது டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோசமாக விளையாடி வருகின்றன. இரு அணிகளும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதே சந்தேகமாகியுள்ளது.
இதனால் இரு அணி வீரர்களும் மிகுந்த கவலையில் உள்ளனர்.வீரர்களிடையே கொரோனா தொற்று பரவலால் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த சீசனினும் தற்போது டெல்லி அணி வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இதை பயன்படுத்தி கவலையில் உள்ள சென்னை, மும்பை அணி ரசிகர்கள் கேன்சல் ஐபிஎல் என டேக் செய்து மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர்.
Comments