தமிழக சட்டப்பேரவையில் சூடும், சுவையுமான நிகழ்வுகள்..!

0 2139

தமிழக சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு கோபமுற்றது, அமைச்சர் துரைமுருகனின் பேச்சால் அவையில் சிரிப்பலை எழுந்தது போன்ற நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.

சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க கூடுதல் நேரம் கேட்டதை தொடர்ந்து கோபமுற்ற சபாநாயகர் அப்பாவு, உறுப்பினர்கள் முறையாக வாய்ப்பு வழங்கப்படுவதாகவும், உருட்டலாம், மிரட்டலாம் என நினைக்க வேண்டாம் என்றும் கூறினார்.

கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக உள்ளதாக குறிப்பிட்ட பாமக எம்.எல்.ஏ. ஜி.கே. மணி, சம்சாரம் இல்லாமல் இருக்கலாம் ஆனால், மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது என கூறியதால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.

 நாகையில் சமுதாயக் கூடங்கள் கட்டித்தர அரசு முன்வர வேண்டும் என எம்.எல்.ஏ ஆளூர் ஷா நவாஸ் எழுப்பிய கேள்விக்கு, அவசர தேவையென்றால், சட்டமன்ற நிதியை எம்.எல்.ஏ. பயன்படுத்தி கூடங்களை கட்டலாம் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறினார்.

 2 நாட்கள் சட்டப்பேரவைக்கு வராததால் பேரவை 'டல்' அடிப்பதாக சிலர் தெரிவித்ததாக குறிப்பிட்ட அமைச்சர் துரைமுருகன், இன்று தாம் வந்தததால் பேரவை எப்படி உள்ளது ? என கேள்வி எழுப்பி சிரிப்பலையை ஏற்படுத்தினார்.

தமிழக அதிகாரிகள் கேரள எல்லையில் தடுக்கப்படுவதாக எம்.எல்.ஏ. வேல்முருகன் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு வரியில் பேச்சை முடியுங்கள் என கூறி பேச்சை நிறைவு செய்ய சபாநாயகர் அப்பாவு அறிவுறுத்தினார்.

சிப்காட் அமைப்பது தொடர்பாக சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, அதற்கான நிலத்தை கண்டு பிடித்துக் கொடுக்க வேண்டும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை எழுந்தது.

 சிப்காட் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுப்பிய கேள்விக்கு, சிப்காட் வேண்டுமா? வேண்டாமா? என சபாநாயகர் அப்பாவு புன்சிரிப்புடன் கேள்வி எழுப்பினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments