தஞ்சாவூரில் மினி பேருந்து மேலாளர் மீது அரசு போக்குவரத்து ஊழியர்கள் தாக்குதல் - சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோ காட்சிகள்.!

0 2365

தஞ்சாவூரில் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி செல்வது தொடர்பான பிரச்னையில் தனியார் மினி பேருந்து மேலாளரை அரசு போக்குவரத்து ஊழியர்கள் தாக்கிய காட்சிகள் வேகமாக பரவி வருகின்றன.

பேருந்து நிலையத்தில் இருந்து வெளியே வரும் மினி பேருந்துகள் ஆமை வேகத்தில் நகர்ந்து, ஆங்காங்கே பேருந்து நிலையத்திற்குள் வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு செல்வதாகவும், மினி பேருந்துகள் சரியான நேரத்தை கடைபிடிப்பதில்லை எனவும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் சார்பில் புகார் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவ்வாறு சென்ற ஒரு மினி பேருந்து குறித்து நேர காப்பாளரிடம் அவர்கள் புகார் தெரிவித்தாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த அந்த மினி பேருந்தின் மேலாளர் நேர காப்பாளருடன் தகராறு செய்ததோடு தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments