போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தருவோரின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும் - சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

0 1549

சென்னையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சென்ட்ரல் காவல் நிலைய காவலர்கள் 2 பேர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், போதைப்பொருள் விற்பனை குறித்து தகவல் தரும் பொதுமக்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் காவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதைப் பொருள் விற்பனை குறித்து தகவல் தரும் பொதுமக்களின் விபரங்கள் வெளியில் கசிந்தால் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

தொடர்ந்து, பேசிய அவர் ஆழ்வார்திருநகரில் பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில், பள்ளி நிர்வாகம் மீது எந்த தவறும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments