ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு

0 10002
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு ஏப்ரல் 26 வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதுவதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 26 வரை ஆசிரியர் தேர்வு வாரியம் நீட்டித்துள்ளது.

ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு மார்ச் 14 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிக்கக் காலக்கெடுவை நீட்டிக்கும்படி விண்ணப்பதாரர்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்ததாகவும், இதையடுத்து விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை ஏப்ரல் 26 வரை நீட்டித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments