பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

0 1754
பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை

யுகேஜி மாணவனை தாக்கிய விவகாரம் தொடர்பாக சென்னை பெரம்பூர் டான் போஸ்கோ பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

தமிழ், ஆங்கில எழுத்துகளை சரியாகப் படிக்கவில்லை எனக் கூறி யூகேஜி படிக்கும் சிறுவனை ஆசிரியர்கள் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், அந்த சிறுவன் மயக்கமுற்ற நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் 3 ஆசிரியர்களை போலீசார் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். இந்நிலையில், பள்ளியில் ஆசிரியர்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம் உள்ளிட்ட அதிகாரிகள், பெற்றோரிடமும் விசாரித்து இதற்கான தீர்வு காணப்படும் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments