பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது

0 1440
பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது

நெல்லை பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில், சிசிடிவி காட்சிகளை வைத்து டீக்கடை ஊழியர்கள் இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை பேருந்து நிலையம் புதுப்பிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றிரவு பேருந்து நிலைய வளாகத்தில் இயங்கும் ஜூஸ் கடைக்கு அருகே மிகப்பெரிய சத்தத்துடன் வெடி வெடித்தது.

இரவு நேரம் என்பதால் யாரும் இல்லாததால் உயிரசேதம் தவிர்க்கப்பட்ட நிலையில், நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது, அங்குள்ள டீக்கடையில் வேலை பார்க்கும் கிருஷ்ணனும், சுடலையும் சேர்ந்து நாட்டு வெடிகுண்டுகளை தயாரித்து, வீசிச் சென்றது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.

இதனையடுத்து, அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருவிழாக்கு வாங்கிய பட்டாசுகளை எடுத்து, நாட்டு வெடிகுண்டு தயாரித்து விளையாட்டுக்காக வீசிப்பார்த்ததாக அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments