தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட அகதிகள் 2 பேர் கைது

சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஈரான் நாட்டை பூர்வீகமாக கொண்ட அகதிகள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட வந்த கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. செயின் பறிப்பு தொடர்பான சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குகை பகுதியில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் சுற்றித்திரிந்த இரு நபர்களை சாதாரண உடையில் பின் தொடர்ந்து சென்ற போலீசார் தாதகப்பட்டி பகுதியில் வைத்து மடக்கி பிடித்தனர்.
விசாரணையில் அவர்கள் கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தை சேர்ந்த ஆசிப் அலி மற்றும் சபிசேக் என்பதும், பல ஆண்டுகளுக்கு முன் இவர்களது குடும்பம் ஈரானில் இருந்து அகதிகளாக வந்து கர்நாடகத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
சேலம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இவர்கள் கொள்ளையில் ஈடுபட்டதும் அம்பலமாகியுள்ள நிலையில், இந்த கும்பலின் தலைவன் சல்மான்கான் என்பவன் மும்பையில் பதுங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.
Comments