ஆளுநருடன் சுமூக உறவு நீடிப்பு.. தேநீர் விருந்தை புறக்கணித்தது ஏன்? முதலமைச்சர் விளக்கம்

0 2281

தமிழக ஆளுநருடன் எந்தவிதமான தனிப்பட்ட விரோதமும் இல்லை என்றும்,  அவருடன் மிகமிக சுமூகமான உறவு தொடர்வதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டசபையின் மாண்பையும், தமிழ்நாட்டு மக்களின் உணவர்வையும் மதித்து நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைப்பது தான் சரி என்றார். அவ்வாறு அனுப்பி வைக்காததால் தான் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்ததாக விளக்கமளித்தார்.

ஆளுநருக்கும், தமக்கும் தனிப்பட்ட முறையில் மிக மிக சுமூகமான உறவு இருப்பதாக கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவருடன் எந்த தனிப்பட்ட விரோதமும் இல்லை என தெரிவித்தார். 

பிப்ரவரி மாதம் சிறப்பு சட்டமன்றத்தை கூட்டி ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாவை, மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்து இன்றோடு 70 நாட்கள் ஆகிறது என்றார். தேவைப்பட்டால், அனைத்து சட்டமன்ற கட்சி கூட்டத்தை கூட்டி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் எனவும் கூறினார். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments