முன்விரோதம் காரணமாக ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் முன்விரோதம் காரணமாக ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்த ஜீவன் குமார் மீது வழிப்பறி, திருட்டு, கொலை மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தியாகி பெருமாள் சாலையில் சென்று கொண்டிருந்த ஜீவன் குமாரை வழிமறித்த 5 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பிச் சென்றது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிமுக நிர்வாகி இறுதி ஊர்வலத்தில் ஏற்பட்ட மோதலில் ஒருவரை அரிவாளால் வெட்டி ஜீவன்குமார் சிறை சென்று வெளியே வந்த நிலையில், விக்கி, ரமேஷ் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது.
Comments