அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் படுகொலைகளால் பதற்றம்.. பாலக்காடு பகுதியில் 144 தடையுத்தரவு அமல்

அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் படுகொலைகளால் பதற்றம்.. பாலக்காடு பகுதியில் 144 தடையுத்தரவு அமல்
அரசியல் கொலைகள் காரணமாக கேரளத்தின் பாலக்காட்டில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 15-ந் தேதி மதியம் 2 மணியளவில் கொழிஞ்சாம்பாறை அருகே பள்ளிவாசலுக்கு சென்று திரும்பிய எஸ்.டி.பி.ஐ. கட்சியை சேர்ந்த சுபைர் என்பவரை அவரது தந்தை கண்முன்னே மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர்.
இதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் பாலக்காடு நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சீனிவாசனை, அவர் வேலை செய்து வந்த கடைக்குள் புகுந்து 6 பேர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர்.
தொடர்ந்து கொலை குற்றங்கள் அரங்கேறி வருவதால், பாலக்காடு மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
Comments