தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் சாலை விபத்தில் உயிரிழப்பு

0 2223

தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னணி டேபிள் டென்னிஸ் வீரர் டி. விஸ்வா சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 18 .

83வது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க கவுஹாத்தியில் இருந்து ஷில்லாங் செல்லும் வழியில் ஏற்பட்ட கோர விபத்தில் விஸ்வா உயிரிழந்தார்.காரை ஓட்டிச் சென்ற ஓட்டுனரும் இந்த விபத்தில் பலியானார்.

தேசிய நெடுஞ்சாலையில் அந்த கார் செல்லும் போது எதிரே அதிக வேகமாக வந்த சரக்கு லாரி திரும்பும் போது சுற்றுலா வாடகைக் கார் மீது மோதியதாக போலீசார் தெரிவித்தனர். சரக்கு லாரி அங்கிருந்த கால்வாயில் தலைகீழாகக் கவிழ்ந்தது. லாரி ஓட்டுனர் மற்றும் காரில் இருந்த இதர பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments