கஞ்சா விற்பனைக்குத் துணைபோன புகாரில் 2 காவலர்கள் கைது.. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை மறைத்து எடுத்துச் சென்று விற்பனை

சென்னையில் கஞ்சா விற்பனைக்குத் துணை போன புகாரில் 2 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகப்பேரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபரான திலீப்குமார் என்பவர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட புகாரின் பேரில் கைது செய்யப்பட்டதையடுத்து, அவரிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில் ரயில்வே காவல்துறை டி.எஸ்.பி ஒருவரின் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக்திவேல் என்ற காவலரும், டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல் அதிகாரியின் அலுவலகத்தில் வேலைபார்க்கும் செல்வகுமார் என்ற காவலரும் கஞ்சா விற்பனைக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்ததை அடுத்து, போலீசார் அவர்களை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 7-ஆம் தேதி ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்ட 18 கிலோ கஞ்சாவில், காவலர் சக்திவேல் என்பவர் ஒரு கிலோ கஞ்சாவை மறைத்து எடுத்து வந்து திலீப்குமார் மூலம் விற்றதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
Comments