திருத்தணி அருகே மினி சரக்கு லாரியின் டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி

0 2801

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே காய்கறி ஏற்றி சென்ற மினி சரக்கு லாரி டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து காய்கறிகள், பழங்கள் எற்றி வந்த வாகனம், திருத்தணி  பட்டாபிராமபுரம் அருகே சென்றபோது திடீரென அதன் பின்பக்க டயர் வெடித்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.

இதில், வாகனத்தின் இருக்கை மற்றும் பின்புறம் என பயணம் செய்த 8 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தலையில் பலத்த காயமடைந்த ருத்ரா என்பவர் சிகிச்சை பலனின்று உயிரிழந்தார். 

விபத்து காரணமாக சாலையில் சிதறிக்கிடந்த பழம் மற்றும் காய்கறிகளை அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிலர் அள்ளிச் சென்ற நிலையில், ரோந்து வாகனத்தில் வந்த போலீசார் அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments