மரியுபோல் நகரை மீண்டும் கட்டியெழுப்ப போவதாக உக்ரைன் நாட்டின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரினட் அக்மடோவ் அறிவிப்பு.!

0 3510

ரஷ்யத் தாக்குதலால் சின்னாபின்னமான மரியுபோல் நகரை மீண்டும் கட்டியெழுப்ப போவதாக உக்ரைன் நாட்டின் நம்பர் ஒன் கோடீஸ்வரரான ரினட் அக்மடோவ் தெரிவித்துள்ளார்.

அந்நாட்டின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான மெட்இன்வெஸ்ட்டின் உரிமையாளரான அக்மடோவ், தனியார்  செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், மரியுபோல் நகரை உக்ரைன் ராணுவத்தினர் நிச்சயம் பாதுகாப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இன்னும் தான் உக்ரைனில் இருப்பதாக தெரிவித்துள்ள அக்மடோவ், ரஷ்ய தாக்குதலால் மரியுபோலில் உள்ள அவரது 2 உருக்காலைகளில், உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், தனது நிறுவனம் ஒரு போதும் ரஷ்ய கட்டுப்பாட்டில் இயங்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments