கரோலினாவில் வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது.!

0 2142

அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் உள்ள வணிக வளாகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார்.

கொலம்பியாவில் உள்ள வணிக வளாகத்தில் சமூக விரோத கும்பலுக்கு இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 14 பொதுமக்கள் படுகாயமடைந்தனர்.

10 பேர் துப்பாக்கிக் குண்டுகளால் காயமடைந்த நிலையில், துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிக்க முயன்ற போது நெரிசலில் சிக்கி சிலர் காயமடைந்தனர்.

இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட 22 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டதாக கொலம்பியா போலீசார் அறிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திலேயே 3 பேர் துப்பாக்கிகளுடன் போலீசாரிடம் பிடிபட்ட நிலையில், அவர்களுள் 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபடவில்லை என உறுதியான பின்னர் அவர்களை விடுவித்ததாகவும் துப்பாக்கி சூடு சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்து வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments