பிரபுதேவாவுடன் இணைந்து நடிகர் வடிவேலு சிங் இன் தி ரைன் பாடலை பாடிய காட்சிகள் இணையத்தில் வைரல்.!

0 4693

21 ஆண்டுகளுக்கு பின்னர் பிரபுதேவாவுடன் இணைந்து நடிகர் வடிவேலு மீண்டும் சிங் இன் தி ரைன் பாடலை பாடிய காட்சிகள் இணையத்தில் ரசித்து பார்க்கப்படுகின்றன.

இருவரும் இணைந்து நடித்த மனதை திருடி விட்டாய் படத்தில் வடிவேலு அதே பாடலை பாடி நடித்து இருந்தார்.

இன்று வரை ரசிகர்களால் ரசித்து பார்க்கப்படும் அந்த பாடல் வரிகளை வடிவேலு மீண்டும் பிரபுதேவாவுடன் இணைந்து பாடிய காட்சிகளை, தமது இணைய பக்கத்தில் பிரபு தேவா பகிர்ந்துள்ளார்.

21 ஆண்டுகள் கடந்தாலும், அதே உடல்மொழி, அதே குரல் வளம் என வடிவேலு பாட்டில் இறங்கி அடிக்க, அதே முக பாவனையை பிரபுதேவா வெளிப்படுத்த, அந்த காட்சி நகைச்சுவையுடன் ரகளையாக உள்ளதாக ரசிகர்கள் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments