பெரம்பலூரில் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்து மிரட்டிய நபர் கைது.!

0 3133

பெரம்பலூரில் பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த நபர், அந்த வீடியோவை வைத்து பெண்ணின் மகளை இச்சைக்கு இணங்குமாறு கூறி மிரட்டியதால் போலீசில் சிக்கியிருக்கிறான்.

கீழக்கணவாய் பகுதியைச் சேர்ந்த செல்வத்திற்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கிறது. வக்கிரப்புத்தி கொண்ட செல்வம், பெண் ஒருவர் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்ததோடு, அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவேன் எனக் கூறி மிரட்டியது மட்டுமில்லாமல், அவரது மகளையும் தனது பாலியல் இச்சைக்கு இணங்குமாறு கூறியிருக்கிறான்.

செல்வத்தின் மிரட்டலுக்கு அடிபணியாமல் அந்த பெண் புகாரளித்த நிலையில், விசாரணை நடத்திய போலீசார் உடனடியாக செல்வத்தை கைது செய்தனர்.

செல்வத்தின் இழி செயலுக்கு அக்காள் முறை கொண்ட அவனது உறவுக்கார பெண்ணான மலர்கொடியும் உடந்தையாக இருந்த நிலையில், அவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments