அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிட மாட்டோம் - இலங்கை ராணுவம்

0 2533

இலங்கையில் அரசுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்களில் தலையிட மாட்டோம் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், போராட்டத்தை ஒடுக்க ராணுவத்தை அரசு பயன்படுத்தக்கூடும் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

மேலும், போராட்டத்தை ஒடுக்கும் வகையில் பிறப்பிக்கப்படும் சட்டவிரோத உத்தரவுகளை ராணுவம் பின்பற்ற வேண்டாம் என முன்னாள் ராணுவ தளபதியான சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து, அமைதியான முறையில் நடைபெறும் போராட்டங்களில் தலையிட மாட்டோம் என்றும், வன்முறை ஏற்பட்டு காவல்துறை உதவியை நாடினால் மட்டுமே களம் இறங்க திட்டமென்றும் அந்நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments